சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் மூன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு, "சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான வாரச்சந்தையில் 90 கடைகள் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லை கூடுதல் கடைகள் கட்டி தரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சங்கராபுரம் அருள்மிகு பொய் சொல்லா மெய்ய அய்யனார் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெற்று பல வருடங்கள் ஆகிவிட்டதால் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலைக்கல்லூரி துவங்க அரசு முன்வருமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வெள்ளை ஊரணி பிள்ளையார் கோவிலை சுற்றியுள்ள வணிக வளாகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா?" உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் கூறிய கோரிக்கைகளுக்கு அதிகாரியிடம் கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக