கோவை மதுக்கரை நகராட்சி ஊழல் குற்றச்சாட்டு பொதுமக்கள் முற்றுகை
கோவை மதுக்கரை மாநகராட்சியில் 27வார்டுகள் உள்ளன தலைவராக திமுக நூர்ஜகான் நாசர் பதவி வகித்து வருகிறார் நகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய அதிமுக ,பாஜக, மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது அது செலவு கணக்குகளை அதிக மதிப்பீட்டில் எழுதி படிகளுக்காக நிர்வாகத்தால் டெண்டர் விடுதல் நிலையில் அந்த டெண்டரை யாராவது ஒப்பந்த புள்ளி குறி செய்தால் அதை ரத்து செய்து. இரண்டு மூன்று தடவைதங்களுக்கு சாதகமானவர்களுக்கு வழங்கியும். கட்டிடங்களுக்கு மேலும் 50,000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறுவதாக கூறினார்கள் இதனால் பொதுமக்கள் தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அங்கு இருக்கும் குப்பைகள் அப்புறப்படுத்தவும் இல்லை எனவும் கூறினார்கள் இதனை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக