2030 ஆம் ஆண்டில் பெருகியிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக நெல்லையில் நடைபெற்ற விவசாயிகள் உற்பத்தி நிறுவன தொடக்க விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் பேச்சு.
நெல்லை மாவட்டம் மூளைக்கரப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து தேவேந்திரா விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் அறிமுக கூட்டம் மற்றும் அர்ப்பணிப்பு விழா மருதம் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் சகாக்கர் பாரதி தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சஞ்சய் பச்சூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தேவேந்திர விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி வைத்தனர்
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஆறுமுகம் 1980 காலகட்டத்தில் விவசாயத்தில் 80 சதவீத மக்கள் இருந்த நிலையில் தற்போது குறைந்து 48 சதவீதம் மக்களே விவசாயம் செய்கின்றனர்.
தற்போதைய உணவு உற்பத்தி இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு போதுமானதாக இருந்தாலும் 2030-ம் ஆண்டில் பெருகி இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தியை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டு உற்பத்தியின் மூலம் அதிக லாபம் அடைய முடியும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது
என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையிலும் விவசாய பொருட்களின் விலையை அதிகப்படுத்தும் விதமாகவும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக