நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் ஓவியம் வரையும் பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் ஓவியம் வரையும் பயிற்சி.

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்தார். பனையின் பயன்கள் குறித்தும், மாணவ மாணவிகள் கலை பயிற்சி பெறுவதின் முக்கியத்துவம் குறித்தும் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனர் ஜான் சாமுவேல் எடுத்துரைத்தார். 

ஓவிய பயிற்சியினை ரோஸ்லின் மோசஸ் வழங்கினார்கள், இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதி அரசர் ஜோதிமணி அவர்கள் தலைமையில் திருமண்டல முக்கியஸ்தர்கள் அன்பர் தாஸ், கருணாகரன், திருமண்டல கல்லூரிகளின் மேலாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ், ஆகியோர் பார்வையிட்டு கலந்து கொண்ட மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்கள். 

நாசரேத் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெரியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை பெற்றனர். பயிற்சியின் நிறைவில் மாணவ மாணவிகள் வரைந்த பனை ஓலை ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. 

கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் காரட் காபிரியேல் தெரிவு செய்தார். நிகழ்ச்சியின் நிறைவாக பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் குருவானவர் ஜேசன் ஜோதி ஆரம்ப ஜெபம் செய்தார், கடையனோடை சேகர தலைவர் ஆசீர் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினார். 

இந்நிகழ்ச்சியில் மறுரூப ஆலய நிர்வாகத்தவர்கள் ஜெயபால் தேவதாஸ், மனோ எட்வர்ட், நளினி ஜீவராஜ் சபை ஊழியர் ஜான்சன் ஸ்டான்லி துரை பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி கோல்டா சாமுவேல், ஆலய பணியாளர் ஆபிரகாம், மோசஸ் தயான் ஆரோன், ராய்ஸ்டன், அபிஷன் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பான பயிற்சி வழங்கிய ரோஸ்லீனுக்கு சபையின் சார்பாக பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இயற்கை ஆர்வலரும், தூத்துக்குடி நாசரே திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனருமான திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad