காளிகொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

காளிகொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது

 

IMG_20250401_084246_405

22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளிகொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலரை தாக்கியதில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை என்கவுண்டர் செய்தனர்.



மதுரையில் கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிளாமர் காளி கொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் முத்துகிருஷ்ணன் மதுரை கல்மேடு நந்தகுமார் காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக் திருப்பூர் சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரை வேலம்மாள் அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை பிடிக்கும் முற்பட்டபோது போலீசார் தாக்கி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் அவரை சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad