சேங்குன்றம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி சார்பாக வேளாண் கண்காட்சி !
குடியாத்தம் , ஏப் 17-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவத் திட்டத் தின் கீழ், குடியாத்தம் வட்டாரத்தில் இயற்கை வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டது
வேலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு)கோபிநாத், ஊராட்சித் தலைவர் குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.மாணவிகள் அமைத்திருந்த வேளாண் கண்காட்சியை பொதுமக் கள், விவசாயிகள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் புதிய விவசாய தொழில்நுட்பங்கள், பஞ்ச கவ்யம், 3G கரைசல் போன்ற இயற்கை இடுப் பொருள்களும், வேளாண் அலுவலகத் தில் விவசாயிகளுக்காக கொடுக்கப் படும் விதைகள் மற்றும் உயிர் உரங் களும், குடியாத்தம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பூச்சிகளும், நோய்களும் அதற்கான தீர்வுகள் குறித்தும்மாணவிகள் விளக்கமளித் தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக