அரசு பள்ளியில் ஆண்டு விழா
நீலகிரி மாவட்டம் எமரால்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆனது செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி ஆனது ஒரு அரசு பள்ளி போன்று இல்லாமல் ஒரு தனியார் பள்ளிக்கு போட்ட கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது பள்ளியின் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போன்று சீருடைகள் பள்ளியில் ஸ்மார்ட் போடு ஒரு மாதிரி பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவானது நேற்றைய தினத்தில் அப்பள்ளியில் நடைபெற்றது இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரெஜி ஸ்டேல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக எமரால்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு ரா கார்த்திக்கு அவர்களும் பள்ளிக்கல்வித் துறையின் மண்டல அலுவலர் ரா.கார்த்திக் அவர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் எஸ் எம் சி தலைவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மாணவ மாணவிகள் என விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த ஆண்டு விழாவில் இயல் இசை நாடகம் என மூன்றும் அரங்கேறியது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த ஆண்டு விழாவின் மிக முக்கியமான நிகழ்வாக இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்கு செல்பவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது விழாவில் இறுதியில் கணித ஆசிரியர் திரு ரமேஷ் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவு பெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக