ஏரல் வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

ஏரல் வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா.

ஏரல் வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா.

01.04.2025 செவ்வாய்க்கிழமை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மேலத்தெரு விஸ்வகர்மா சமுதாய வடபத்திரகாளியம்மன் திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது

அதனை முன்னிட்டு திங்கள் இரவு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது
இரவு எட்டு மணியளவில் முனிசாமி பூஜை நடைபெற்றது

செவ்வாய் காலை எட்டு மணியளவில் நேர்த்திக்கடன் நேர்ந்த பக்தர்களால் பால்குடம் எடுத்து வரப்பட்டது அதைத் தொடர்ந்து ஹோமம் நடத்தி அபிஷேக கும்பம் ஏற்றப்பட்டது

மதியம் ஒரு மணியளவில், மஞ்சள் பால் நீராடியதும், மூலவர் பத்திரகாளி
செல்வ விநாயகர், லட்சுமி நாராயணர்
தொழில் கடவுள் விஸ்வகர்மா மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு மதியக்கொடை விழா நிகழ்ச்சிகள் விமர்ச்சையாக நடைபெற்றது

மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொன்மையும் பல்வேறு சிறப்புகளும் நிறைந்த இந்த கோவில் கொடை விழாவில் 
ஏரலிலுள்ள மற்ற சமுதாய கோவில்களைச் சார்ந்த நிர்வாகிகள் மரபார்ந்த பக்தி பரிபாலனம் செய்தார்கள்

இரவு எட்டு மணியளவில் அம்பாள்
பூம்பல்லக்கில் நகர்வலம் வருதல் மற்றும் 
தென் மாவட்டங்களில் தனித்துவமாகத் திகழும்
கிராமியக் கலையான மகுடஇசை நடைபெற்றது

இரவு பன்னிரண்டு மணியளவில், சாமக்கொடையும் அதிகாலை படைப்பு பிரித்து அன்னம் பரிமாறுதலும் நடைபெற்றது

விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாய நிர்வாகக் கமிட்டி மற்றும் இளைஞரணிகள் சிறப்பாக செய்தனர்.

வரிதாரர்கள் பக்தர்கள் உட்பட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

         E R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad