தேசிய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில மையக் குழுவின் ஆரம்பக் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

தேசிய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில மையக் குழுவின் ஆரம்பக் கூட்டம்!

தேசிய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில மையக் குழுவின் ஆரம்பக் கூட்டம்! 

பொள்ளாச்சி, ஏப் 10 -
 
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில்  தேசிய  தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில மையக் குழுவின் ஆரம்ப கூட்டம் பல்வேறு தீர்மானங்களுடன்  RSS சங்க காரியாலயத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தென்னை விவசாயி கள் கூட்டமைப்பின் தலைவர் உடுமலை R. சுந்தர்ராஜன்  தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, திருச்சி, திருப்பூர்,கோவை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கிருஷ்ண கிரி  மாவட்டங்களை சார்ந்த பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.
 நிகழ்ச்சியின் நிறைவாக
கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1. தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக குறிப்பாக தென்னை விவசாயத்தில் வெள்ளை ஈ தாக்கம், வாடல் நோய் மற்றும் தட்பவெப்பநிலை மாறுபாடுகள், தென்னைக்கு எதிரான போட்டி காரணிகள் காரணமாக மிகவும் கடும் பாதிப்புகளால்  உற்பத்தி பாதிப்பு சந்தித்து வருகிறது.
 
2. இப்போது தென்னை உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக  திகழும் பொள்ளாச்சி கோவை  மற்றும் கன்னியாகுமரி  வீரியமாக உள்ளதாலும் நோயிலிருந்து மீண்டு வரும் கிருஷ்ணகிரி கேந்திர கண்களின் உற்பத்தித் திறன்  50 சதவிகிதத்திற்கும் கீழ் சரிவடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

3. மேலும் இந்நோயின் தாக்கம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வரும் சூழலில், அரசின் பாராமுகமும் இதற்கு நிரூபிக்கப்பட்ட நோய் தடுப்பு முறைகளை  கண்டறியப்படாதது   துரதிஷ்டவசமானது.

4. போர்க்கால அவசர அடிப்படையில் அரசின் விவசாயத்துறையின்   அணுகுமுறை இல்லாது பெயரளவில் விவசாய பண்ணையில் செய்யும் பல்வேறு சோதனைகள் எந்த பலனும் நிரந்தர தீர்வும் இல்லாது,   குறைந்த பட்சம் நிலத்தில் கரிமவளத்தை காக்க நிரந்தர தீர்வுக்கான செலவை குறைக்கும் இயற்கை விவசாய வேளாண் அணுகுமுறைகள் பற்றிய தெளிவு இல்லாமல் பல்வேறு தனியார் உர மற்றும் மருந்து நிறுவனங்களால் பல்வேறு வகையில்  விவசாயிகளிடம் மறைமுக சுரண்டலில் ஈடுபடடுவது தென்னை விவசாயிகளை மேலும் கடனாளிகளாக்கும்  கவலைக்குரிய நிலை.

5. உற்பத்தி இழப்பின் காரணமாக தேங்காய் சந்தையில் நிலவும் பற்றாக்குறையே இன்று காணப்படும் அசாதாரண விலை உயர்வு என்பதாகும். இந்த உயர்வு பற்றிய தகவலை நுகர்வோர் பார்வைக்கு எடுத்து செல்லும் அதே நேரத்தில் விவசாயி சந்திக்கும் உற்பத்தி செலவு அதிகரிப்பு இழப்பை இது  ஈடுகட்டுவதாக இல்லை என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது பாரதீய கிசான் சங்கம் அமைப்பின் தலையாய கடமையாகும். 

6.மேலும் தென்னை வாரியம் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய வாரியான போர்க்கால  அணுகுமுறை நோய் மேலாண்மையில்  வருமுன் காக்கும் திட்டங்கள் அனைத்தும் நேரிடையாக விவசாய மக்களை சென்றடைய விழிப்புணர்வு தேவை. 

7. தற்போதைய சந்தை நிலவரம் சார்ந்த கொப்பரை ஆதார விலை உயர்வோடு, நோய் பாதிப்புகள் ஏற்படும் மரங்களுக்கு நிவாரண விலை,  குறைந்தபட்ச காப்பீடு தொகை திட்டம், கள் இறக்க அனுமதி என்று பல்வேறு கோரிக்கைகளை சங்கம் முன்வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8. இதன் தொடர்ச்சியாக  மத்திய, மாநில அரசுகள் மற்றும் தென்னை வாரியத்தை அனுகி நேரில் சந்தித்து பிரச்சனையின் தீவிரத்தை  எடுத்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. 

நிகழ்ச்சியை அகில பாரத தென்னை அணி ஒருங்கிணைப்பாளர்      N. S. பார்த்தசாரதி ஒருங்கிணைக்க
ஏற்பாடுகளை, மாநில தென்னை விவசாயிகள் அணி  தலைவர்  P.முருகன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் மாநில அமைப்பாளர் C. S. குமார் ஒருங்கிணைக்க சி.பாலசுப்ரமணி மாநில செயற்குழு உறுப்பினர் பாரதீய கிசான் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தென்னை அணி தலைவர்  பொன்னுசாமி நிகழ்ச்சி இறுதியாக
கோவை மாவட்ட தலைவர்  சபாபதி நன்றி கூறி நிறைவு செய்தார்.

தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad