நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டுவிழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டுவிழா

IMG-20250412-WA0023


  காங்கேயம் அடுத்துள்ள  அரச்சலூர்  நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் 31-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.விழாவில் கல்லூரி செயலாளர் கோ. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.  கல்லூரியின் தலைவர் டி.கே. தாமோதரன் தலைமையுறையாற்றினார்.  பொருளாளர் சி. பழனிச்சாமி  சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.கனிஎழில்  2024- 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.அதைத் தொடர்ந்து கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு  வாழ்த்துரையாற்றினர். 

 விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 11:11 படக்குழுவினர்களான கிங் ஸ்கார்பியன் புரொடக்க்ஷன் தயாரிப்பாளர் டி. விஸ்வநாத், பாண்டி கமல், நிரோஷா,  திரைப்பட பாடல் ஆசிரியர், ஒளிப்பதிவாளர் ராகவா ஹரி கேசவா,தயாரிப்பாளர் திருமலை அழகன்  ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதனையடுத்து 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.பின்னர் கல்லூரி மாணவிகளின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் கோலாலமாக நடைபெற்றன. இதில் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக கல்லூரியின் துணை முதல்வர் வி. சீனிவாசன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad