தென்காசி - திமுக வழக்கறிஞர் அணி சார்பாக குற்றாலத்தில் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

தென்காசி - திமுக வழக்கறிஞர் அணி சார்பாக குற்றாலத்தில் ஆலோசனைக் கூட்டம்.

திமுக வழக்கறிஞர் அணி சார்பாக குற்றாலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்- குற்றாலம் முருகன் மஹாலில் வைத்து 2026 இல் சட்டமன்றத் தேர்தல் குறித்து வழக்கறிஞர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, 

வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர்மு.க. ஸ்டாலின் அவர்கள் 200 தொகுதிகளை வென்றெடுப்பது தொண்டர்களின் கடமைஅதைவழிநடத்தி ஆலோசனைகளை வழங்கி வென்றெடுப்பது வழக்கறிஞர்களின் தலையாயக் கடமை என தெரிவித்தனர்.தலைமை மாநில சட்டத்துறை செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ, முன்னிலை மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் கே. எஸ்.ரவிச்சந்திரன், எஸ். ராஜா முகமது, தலைமை கழக வழக்கறிஞர் எஸ். எஸ். மனோஜ், சிறப்பு அழைப்பாளர்கள் 

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.ஜே. சரவணன் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், 

பேரூர்கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் நன்றியுரை தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கபாண்டியன் அனைவரையும் வரவேற்று மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad