மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் ஒன்பதாம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் ஒன்பதாம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

IMG-20250401-WA0192

மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் ஒன்பதாம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் திரு ராஜ்குமார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மானாமதுரை காவல் கண்காணிப்பாளர் திரு பி. நிரேஷ் மற்றும் மதுரை விமான நிலைய மேலாளர் என். சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி பி. பாண்டியம்மாள் கணேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துக்கண்ணன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாநில உறுப்பினர் வேல்முருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி, ஆகியோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். இந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கான நடன, இசை மற்றும் கலைப் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad