அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்!

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்!

திருப்பத்தூர் , ஏப் 14 -

திருப்பத்தூர மாவட்டம் 1581 பயனாளி களுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி காட்சியின் வாயிலாக  அம்பேத்கர்  பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறையின் சார்பில்  புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை  திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவ சௌந்தரவல்லி  தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 16 துறை சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள  1581  பயனாளிகளுக்கு 29 கோடியே 21லட்சம்  மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி கடன், வங்கி கடன்.மற்றும் விவசாயிகளுக்கு விதை மற்றும் பெண் களுக்கு தையல் இயந்திரம்.இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன பின்னர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் சமத்துவ உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச் சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் தேவராஜ், மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வ நாதன். மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வடிவேல். நகர செயலாளர் ராஜேந்திரன். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன் . சத்யா சதீஷ். காவியா விஜயா அருணாச்சலம் திருப் பத்தூர் துணை சேர்மன் ஏ ஆர் சபியுல் லா.கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.மேலும் பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் பயனாளிகள்  திமுக கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad