கோவை கா. கா. சாவடி பகுதியில் உள்ள தானிஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா இனிதாக துவக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் வரவேற்புரை வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களின் இன்றைய நிலை மற்றும் கல்லூரி நாட்களை நினைவு கூர்த்தனர். முன்னாள் மாணவர்கள் இன்றைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் அரசாங்க தேர்வுகளுக்கு உதவுதாக உறுதியளித்தனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் தலைமை இயக்குனர் கே.ஏ. அக்பர் பாஷா மற்றும் தலைமை செயல் நிர்வாக அதிகாரி திரு. அ. தமீஸ் அகமது அவர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியாக திரு. சந்திரபிரகாஷ் துணை பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் நன்றியுரை ஆற்றினார்.
இச்செய்தி குறிப்பினை தங்கள் நாளிதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக