குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 54ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
குடியாத்தம் , ஏப் 09 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 54ஆம் பட்டமளிப்பு விழா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வாசுகி தலைமையில் நடைபெற்றது. அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். வாசுகி, விழா பேருரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலையில் 360 மாணவர்களுக்கும், முதுகலையில் 127 மாணவ மாணவிகளுக்கும், மொத்தம் 495 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் துறை தலைவர் சிவகுமார், கருணாநிதி, தாமரை, விஜயரங்கம், தமீம் அன்சாரி, சுஜாதா, கல்பனா, லோகநாதன், கார்த்திகேயன் அற்புதம் ஆகியோர் முன்னிலையில் இந்த பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப் பித்தனர். இறுதியில் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக