வருவாய் கோட்டத்தின் புதிய கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள எ.செந்தில்குமாருக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வரவேற்பு!
வேலூர் , மார்ச் 24 -
வேலூர் மாவட்டம் வருவாய் கோட்டத்தின் புதிய கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டக்கிளை யின் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் பதவிவழி தலைவராக பொறுப் பேற்றுள்ள எ.செந்தில்குமார் அவர்களை இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றோம்.
இந்த நிகழ்விற்கு அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு வரவேற்றார். அவைத் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி செயல்பாடுகள் குறித்து பேசினார்.
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், பி.என்.ராமச் சந்திரன், ஆயுள் உறுப்பினர் ஆர்.சுதாகர் பொருளாளர் வி.பழனி உள்ளிட்டோரும் பேசினர்.அப்போது மாநில அளவில் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி மூன்று ஆண்டுகள் தொடர்சியாக மாநில அளவில் சிறப்பாக செயலாற்றியதற்காக தமிழக ஆளுநரிடமிருந்து விருதுகளை பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்தோம்.