நெல்லை அருணா கார்டியாக் கேர் ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை மையத்தை பெருங்குளம், செங்கோல் ஆதீனம் 103 வது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் தலைவர் அருணாச்சலம் நிர்வாக இயக்குனர் ஸ்வர்ணலதா அருணாச்சலம் துணைத் தலைவர் தர்ஷன் விஜேஷ் ஆனந்த் துளசிராம் மாதவன் சங்கமித்ரா கணபதி சக்திவேல் ஜெயக்குமார் ராமசுப்பிரமணியன் பத்ரி சீனிவாசன் கீதா கருணாகரன் மற்றும் அனைத்து ஊழியர்கள் பங்கேற்றனர்
இது குறித்து அருணா கா ர்டியாக் கேர் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் அருணாச்சலம் கூறியதாவது நெல்லை அருணா கார்டியாக் கேர் அதிநவீன தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துடன் அறிமுகப்படுவதில் தமிழகத்தில் முன்னோடி மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஓ. சி. டி யை தென் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி தென் ஆசியாவில் அதிக ஆஞ்சியோ பிளாஸ்டி நெல்லையை சுற்றியுள்ள மக்களுக்கு செய்து வரும் அருணா கார்டி யாக் கேர் தனது அடுத்த அதிநவீன தொழில்நுட்பமான இதயம் மற்றும் ரத்த இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கான லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி யை அறிமுகம் செய்துள்ளார்
ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது இதயத்தில் உள்ள அடைப்புக்களை நீக்கும் டிரான்ஸ் கத்திட்ட செயல்முறையாகும் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது ரத்தத்தை எடுத்துச் சொல்லும் ரத்த நாளங்களுக்குள் உருவாகி இருக்கும் ரத்த உரை கட்டிகள் மற்றும் அடைப்புக்களை ஆவியாக்கி அகற்ற பயன்படுத்தப்படுகிறது மேலும் லேசர் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி குறிப்பிட்ட இலக்குகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை தவிர்த்து பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதில் அருணா கார்டியாக் கேர் பெருமிதம் கொள்கிறது
இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்யப்பட்ட நோயாளிகள் சிலரும் ஐந்து சதவீதம் மீண்டும் ஸ்டென்ட் சுருக்கம் ஏற்படாமல் இவ்வாறு ஏற்படும் சுருக்கங்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தவிர்த்து மீண்டும் மிகவும் துல்லியமான முறையில் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரிசெய்ய லேசர் கதிர்வீச்சு கொண்ட நவீன ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மிகச் சிறந்த பயன்பாட்டை அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்
அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்வர்ணலதா கூறும்போது " இதய சுகாதாரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மக்கள் நலத்திற்கு அருணா கார்டியாக் கேர் அர்ப்பணித்து வருகின்றது புதிய லேசர் தொழில்நுட்பத்தால் இதய நோயாளிகள் இனி மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை பெறலாம் என்று கூறினார்.
மாடசாமி - திருநெல்வேலி செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக