பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற பெண்ணை சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து அலட்சியமாக பேசிய மருத்துவர்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற பெண்ணை சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து அலட்சியமாக பேசிய மருத்துவர்!

 பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற பெண்ணை சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து  அலட்சியமாக பேசிய மருத்துவர்!

 ராணிப்பேட்டை , மார்ச் 26 -

 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சுவாதி(வயது 23) என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவ வலி வந்த நிலையில் அவரை உடனடியாக வாலாஜா அரசு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உடனடியாக அங்கே இருந்த செவிலியர்களிடம் எனது மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது என்று அவர்களது தாய் தந்தையர் கூறினார்கள் ஆனால் காதில் வாங்காத அந்த செவிலியர்கள் இரண்டு மணி நேரம் காக்க வைத்து பின்னர் மருத்துவர் அர்ச்சனா என்பவரை அழைத்து வந்தனர் ஆனால் சுவாதியின் தாய் தந்தையரிடம் செக்கப் எங்கு செய்தீர்கள் அதற்கு லாடவாரம் ஹாஸ்பிடலில் செக்கப் செய்து இருந்தோம் என்று கூறினார்கள் மருத்துவர் மிகவும் அலட்சியமாக பேசி அவர்களிடம் செக்கப் ஒரு ஹாஸ்பிடல் செய்வீர்கள் பிரசவத்திற்கு மட்டும் இங்கு வருவீர்களாஎன்று நக்கலாக
பேசினார்கள்‌ பின்னர் நான் பிரசவ மருத்துவர் அல்ல என்றும் அலட்சியப் படுத்தும் வகையில் பேசி இவருக்கு நார்மல் டெலிவரி ஆகாது என்றும் உடனடியாக இவரை அடுக்கும்பாறை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியதின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் சுவாதியை அழைத்துச் சென்றனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சுவாதிக்கு அடுத்த 15 நிமிடங்களில் நார்மல் டெலிவரியில் பெண் குழந்தை பிறந்தது இவர்களுக்கு நார்மல் டெலிவரி நடக்காது என்றும்  கூறிய அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரசவ மருத்துவர்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரசவ மருத்து வர்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஆர் ஜே சுரேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad