நீண்ட நாள் களுக்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆதரவு பெற்ற திமுக! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

நீண்ட நாள் களுக்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆதரவு பெற்ற திமுக!

நீண்ட நாள் களுக்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆதரவு பெற்ற திமுக!

வேலூர் , மார்ச் 26 -

தேவேந்திர குல வேளாளர்களின் சமூகப் போராட்டம், இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல கோரிக்கைகளுக்காக தேவேந்திர குல வேளாளர் சமூகங்களை சேர்ந்த ஜான்பாண்டியன் , கிருஷ்ணசாமி ,எஸ் ஆர் பாண்டியன் மற்றும் பல்வேறு தேவேந்திர குல வேளாளர் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர் .
இதன் தொடர்ச்சியாக கடந்த ஐந்தாண்டு களுக்கு முன்பு மத்திய பாஜக அரசு தேவேந்திர குல வேளாளர்கள் என இவர்களுக்கு சான்று அளிக்கலாம் என அரசாணை வெளியிட்ட உத்தரவிட்டது
அதன்படி தமிழ்நாடு அரசு இதனை நடைமுறைப்படுத்தியது இருப்பினும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள்ளதுதேவேந்திர குல வேளாளர் சமூகப் பிரிவின் தலைவர்கள் ஜான்பாண்டியன் , டாக்டர் கிருஷ்ணசாமி  தூத்துக்குடி எஸ் ஆர் பாண்டியன் ஆகியோர் அரசியல் ரீதியாக  கருத்து வேறுபாடுகளாக பிரிந்து இருந்தாலும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை ஒன்றாக உள்ளது ஜான்பாண்டியன் கடந்த காலங்களில் எழும்பூர்., தென்காசி தொகுதிகளில் இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு  தோல்வி அடைந்தார் அதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மேலும் இவர்களது மவுஸ் தற்போது குறைந்துள்ளதாகவே தேவேந்திரகுல சமூக மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது நினைவிடத் திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்திவந்த எஸ் ஆர் பாண்டியன் அன்றைக்கு முழு கதாநாயகராக வலம் வருவார் இதில் மற்ற தலைவர்கள் மவுசு குறைந்து தூத்துக்குடி எஸ் ஆர் பாண்டியன்  கைச்சற்று ஓங்கி உள்ளது  
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்காக பேரவையை நடத்தி வந்த எஸ் ஆர் பாண்டியன் திமுக ஆதரவு தெரிவித்து 
தற்போது திமுகவின் ஆதரவாளராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் இன்னும் சொல்ல போனால் பறையர் சமூகத்தில் திருமாவளவன் எப்படி திமுகவுக்கு ஆதரவாளரோ அதுபோல் தேவேந்திரகுல சமூகத்தில் தன்னை முன்நிறுத்தி கொள்ள  சென்னையில் முகாமிட்டு திமுக தலைமை நிர்வாகிகளை சுற்றி வளைத்து  வருகிறார் இதனால் தென் மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வட்டாரத்தில் எஸ் ஆர் பாண்டியன் மவுசு கூடியுள்ளது இதனைத் தவிர்த்து  திருமாவளவன் நாகை திருவள்ளுவன் கே எம் ஷெரிஃப் திரு முருகன்காந்திஉள்ளிட்டோர்மேடைகளில்  இஸ்லாமியர்கள் , பட்டியல் சமூக மக்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காக பேசி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆகவே எஸ் ஆர் பாண்டியன் மாறிவிட்டார் என்று ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி குரூப்புகள் சமூக வலைதளங்களின் பேசி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக வாழ்வுரி மைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விசிக வன்னி அரசு, திருமுருகன் காந்தி, தனிஅரசு உள்ளிட்ட தலைவர்களை அழைத்து தமிழர் ஆட்சிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி கொடியை அறிமுகம் படுத்தினார்  தென் மாவட்டங் களில் அனைத்து ஜாதி மக்களின் மத்தியில் எஸ் ஆர் பாண்டியன் மவுஸ் அதிகரித்து உள்ளதாக அனைத்து சமூக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்
தென் மாவட்டங்களில் சட்டமன்ற நாடாளு மன்ற சீட்டுகளை உறுதிப்படுத்தும் திமுகவின் ஆளுமைகளின் ஒருவரான கனிமொழியின் குட் லுக் லிஸ்ட்டில் , அரசியல் ரீதியாக தமிழர் ஆட்சிக் கழகம்  இருக்கிறது என உளவுத்துறை தெரிவித்து ள்ளது வரும் காலங்களில் எஸ் ஆர் பாண்டியனை திமுக  திமுக பயன்படுத்தி கொண்டால் தேவேந்தி ரகுல வேளாளர்களை குளிர வைத்து விடலாம் என  உளவுத்துறை சீக்ரெட் ரிப்போர்ட் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது  தெரிய வருகிறது , மேலும் சென்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக முன்னாள் MLA முருகவேல் ராஜனுக்கு  கொடுத்த வாய்ப்பை தவறவிட்டதும், அதே சமூதாயத்தில் அவர் செல்வாக்கு இழந்து நிற்பதும்  உளவு துறை அந்த ரிப்போர்ட்டில் தெரிவித் துள்ளது திமுகவில் பறையர் சமூகத்தில் திருமாவளவனும் அருந்ததியர் சமூகத்தில் நாகை  திருவள்ளுவனும் இஸ்லாமிய சமூகத்தில் தமிமுன் அன்சாரி, ஜவாகிருல்லாவும் ,வன்னியர் சமூகத்தில் வாழ்வுரிமைக் கட்சி வேல் முருகனும் இருந்து வரும் நிலையில்  தேவேந்திரகுல வேளாளர்களில் எஸ் ஆர் பாண்டியன் பெயர் அந்த லிஸ்ட்டில் ஏற்றபட்டுள்து. தேவேந்திரகுல சமூக மக்கள் முழுமையாக அவரை ஏற்று கொள்கிறார்களோ மறுக்கிறார்களோ ஒரு பக்கம் இருந்தாலும் பறையர்களும் இஸ்லாமியர்களும் வன்னியர்களும் முத்தரையர்களும், தமிழ்தேசியம் பேசும் தலைவர்களும் எஸ் ஆர் பாண்டியனுக்கு முழு ஆதரவு தெரிவிப்பது ஆச்சர்யமான உண்மையாக உள்ளது எது எப்படியோ தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்கு களைப் பெற திமுகவுக்கு ஒரு ஆதரவு கிடைத்துள்ளது இவரை வைத்து திமுக எவ்வாறு காய் நகர்த்தி வருகிறது என்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் பொறுத் திருந்து பார்ப்போம் என் தெரிவித்தனர்.

தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad