ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம். இக்கூட்டத்தில் வட்டார வரியாக விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் கருத்துகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், இடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பயிர் காப்பீடு ஊரணி தூர்வாருதல், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது கம்மாய்கள் தூர்வார்கள் தடுப்பணை கட்டுவது, சாலைகள் சீரமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியர் இடம் கோரிக்கை வைத்தனர். விவசாயப் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைக்கு துறை ரீதியாக அலுவலர்கள் பதில் அளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் காற்றுப் பன்றிகள் கட்டுப்படுத்தவும் விளை நிலங்கள் பாதிப்படைய செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்ததையொட்டி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களை இட்டுப் பொருட்களை வைத்து உரிய விளக்கங்கள் வழங்கும்பருத்திக்கும் மிளகாய்க்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திட ஏதுவாக வரும் வியாழன் 03.04.2025 அன்று பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் வியாபாரிகள் இணைப்பு கூட்டம் நடத்தப்படும் கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் தொடர்ந்து அனைத்து வட்டாரங்களிலும் இக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் கோமாரி நோய் மூலம் கால்நடைகள் பாதிக்காத வகையில் தேவைப்படும் பகுதிகளுக்கு முகாம்கள் நடத்தும் மேலும் முகாம்கள் தொடர்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, வேளாண்மை துறை இயக்குனர் இணை இயக்குனர் மோகன்ராஜ், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) (பொ)பாஸ்கர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக