மீட்கப்பட்ட பணத்தை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஓருவர் தனது வாட்ஸ்அப்பில் https://www.equifunds-6.shop என்ற பங்குசந்தை இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று வந்த செய்தியை நம்பி அந்த இணையதளத்தில் ரூபாய் 22,82,000/- முதலீடு செய்து பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் NCRPல் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட நபரின் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய் 5,40,000/- ஐ மீட்டனர்.
அதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அந்த பெண் மேற்படி மர்மநபர்களுக்கு ரூபாய் 16,61,038/- பணத்தை அனுப்பி பின்னர் தான் மோசடி செய்யப்பட்டது
குறித்து NCRPல் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட நபரின் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய் 1,50,000/- ஐ மீட்டனர்.
மேலும் சைபர் கிரைம் வழக்குகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி வழக்குகளில் மீட்கப்பட்ட மொத்தம் ரூபாய் 6,90,000/- பணத்தை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
*மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக