ஊட்டி எல்க்ஹில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருத்தேர் விழா இன்று கோலாமாக நடைபெற்றது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டு அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அவ்வகையில், தமிழ்நாட்டின் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ள மிக அழகான மலைகளில் ஒன்றான எலிக்கல் மலையில் முருகப்பெருமான் பழநி பாலதண்டாயுதபாணி சுவாமியாக அருள்பாலிக்கின்றார். ஊட்டியில் இயற்கை எழில்சூழ்ந்த பகுதியான திருமான் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் எழுந்தருளியுள்ள 95 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோயிலில் உள்ளதை போன்ற 44 அடி உயர முருகன் சிலை உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் தைப்பூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருத்தேர் விழா இன்று நடைபெற்றது.நேற்று காலை 5 மணியில் இருந்து 8.15 மணி வரை 11ம் நாள் பூஜை, பெருந்திரு முழுக்காட்டல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 11.55 மணியளவில் தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகன் தேரை பாஜக முன்னால் தலைவரும் கிருத்திகை சங்க நிர்வாகியுமான மோகன்ராஜ், உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் அங்கிருந்து ஊட்டி நகரில் மாரியம்மன் கோயில், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் மாலையில் கோயிலை சென்றடைந்தது.இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தாிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ திருமுருக கிருத்திகை சங்க தலைவர் திரு மோகன்ராஜ், செயலாளர் திரு வரதராஜன், பொருளாளர் திரு மூர்த்தி மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக