உதகை காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உதகை காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு

IMG-20250211-WA0019

உதகை காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு 


 நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காத்தாடி மட்டும் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.  சாந்தி அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள்.....

 

தமிழக அரசு அண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலநிலை மாற்றம் குறித்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெரும்பான்மையான பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லை என்பது வருந்தத்தக்கது. அவர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளிலேயே அவர்கள்  சிக்கித் தவிப்பது  ஒரு காரணமாகவும் இருக்கலாம். காலநிலை மாற்றம் என்பது ஒரு அணுகுண்டு வெடிப்பிற்கு ஒப்பானது. விஞ்ஞானிகளின் கணிப்பை விட காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாகவும் விரைவாகவும் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழக அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

 

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள் நடுவதும் காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதும் பசுமை பரப்பை விரிவாக்குவதும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால் இது மட்டும் போதாது. அறிவியல் பூர்வமான பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக உணவு உற்பத்தி முறையில் நவீன அறிவியல் முறைகள் புகுத்தப்பட வேண்டும். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சத்துள்ள உணவு பொருட்களை தயாரிப்பது நவீன அறிவியல் முறையில் சாத்தியமே. நேனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாவரங்களின் இலைகளை மாற்றி அமைத்து அதனுடைய கார்பன் உட்கொள்ளும் திறனை அதிகரிக்க செய்தல், அண்டார்டிகா பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதை தடுக்கும் ஆய்வுகள், சூரிய ஒளி, கடல் அலைகள்  மற்றும் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க முழு முயற்சி எடுக்கப்பட வேண்டும். நிலக்கரியின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும். வாகனங்கள் அனைத்தும் பசுமை வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு ஆடம்பர வாழ்க்கையையும், நுகர்வு வெறியையும் இந்த பூமியை காக்க தியாகம் செய்ய வேண்டும். பொதுமக்களிடையே கால நிலை மாற்றத்தை பொறுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம்  காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கலாம். வயநாடு போன்ற பேரிடர் வந்த பிறகு வருந்துவதை விட வரும் முன் காப்பதே அறிவுடைமை என்பது போன்ற பல கருத்துக்களை கூறினார். முன்னதாக ஆசிரியை பவித்ரா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை ஆமினா நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad