குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!


குடியாத்தம் , பிப் 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், ரங்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வி. காவியா (வயது 21) த/பெ. லேட். மோகன்ராஜ்  என்பவர் இன்று 23.02.2025 பிற்பகல் 12.00 மணியளவில் அவரது வீட்டில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து கிடந்துள்ளார் மேற்படி நபரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு   கொண்டு சென்றனர். மேற்படி நபரை பரிசோதித்த  டாக்டர்கள் மேற்படி நபர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித் ததின்பேரில் மேற்படி நபரின் பிரேதமானது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நபருக்கு திருமணம் ஆகவில்லை என விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி நிகழ்வு குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad