குடியாத்தம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் உயிரிழப்பு
குடியாத்தம் ,பிப் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்வட்டம் அணங்காநல்லூர் கிராமம் மேல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. மூர்த்தி த/பெ குப்புசாமி வயது (சுமார் 43) என்பவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் அளவுக்கு அதிகமான மது குடித்ததால் இறந்து விட்டதாக கிராம விசாரணையில் தெரிய வந்தது மூர்த்தியின் உடன் பிறந்த சகோதரி தாமரைச்செல்வி த/பெ குப்புசாமி என்பவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக குடியாத்தம் தாலுக்கா காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டார் அதன் பெயரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக