இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணியை அடுத்த தங்கப்பாநகர் பகுதியில் வசித்து வரும் சுகன்யா என்பவர் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் நடக்க விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளர் சம்பந்தப்பட்ட நபர் மீது கேணிக்கரை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்து உள்ளார் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை விசாரணைக்கு அழைத்தபோதிலும் வராமல் இருந்து வந்துள்ளார் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டதால் சுகன்யா இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரு குழந்தைகளுடன் வந்து பெட்ரோல் ஊற்றிக் கொண்டார் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கேணிக்கரை காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக