அப்துல் கலாம் டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக் கான இலவச டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி துவக்கம் ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

அப்துல் கலாம் டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக் கான இலவச டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி துவக்கம் !

குடியாத்தம் , பிப் 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் அப்துல் கலாம் டிரஸ்ட் ஆகியவை இணைந்துஞாயிற்றுக் கிழமை காலை குடியாத்தத்தில் மாணவர்களுக்கான இலவச டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் சி.கண்ணன் தலைமை தாங்கினார்.செயலாளர் பாலமுருகன்,தொழில் பணி இயக்குனர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ.கே.என்.பழனி பயிற்சியை தொடங்கி வைத்தார்.முன்னாள் தலைவர்கள் ஆர்.வி.ஹரிகிருஷ்ணன், ஏ.மேகராஜ், வருங்கால தலைவர்கள் சந்திரன், ரவி, ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் பாண்டியன்,பெரிய கோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad