கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஐ. ஆர். இ. எல். நிறுவன அதிகாரிகள் சென்ற கார் சிறை பிடிப்பு
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் ஐ.ஆர்.இ.எல். நிறுவன அதிகாரிகள் பங்கேற்க சென்றனர். அப்போது மணல் எடுக்க அதிகாரிகள் சென்றதாக வெளியான தவறான தகவலால் மக்கள் அதிகாரிகள் வாகனதை சிறை பிடித்தனர். தொடர்ந்து முகாமில் இருந்து அதிகாரிகள் தப்பி சென்றனர். அதிகாரிகள் வாகனத்தை கொல்லங்கோடு போலீசார் மீட்டு சென்றனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக