கே வி குப்பம் பிப் 22 -
வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடைபெற்ற கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி
களுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெருமாள் வரவேற்புரை யாற்றினார் இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, அவர்கள் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டத்திலும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது மாற்றுத் திறனாளிக் கான முகாம் நடைபெறும் தேதிகள் நடைபெற இடங்களை மக்கள் பிரதி நிதிக்கு தகவல் கொடுத்து முகாம் நடைபெறுகிறது முகாம் நடை பெறுவதற்கு துறைவாரியான அதிகாரி நியமனம் செய்து இதில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,09,000/- வீதம் என ரூ.3.27,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இம்முகாமில் கு.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜெகன்மூர்த்தி, கே.வி. குப்பம் ஒன்றியக்குழுத்தலைவர் ரவிசந்திரன். ஒன்றியக்குழு உறுப்பினர் கள் சீதாராமன், ஜெயாமுருகேசன், சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன். இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. இலட்சுமணன், மகளிர் திட்ட இயக்குநர் உ. நகாராஜன், பி.கே.புரம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன். கீ.வ.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். பெருமாள் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி மேகநாதன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக