நாசரேத் - குடியிருப்பு பகுதியில் தொலை தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

நாசரேத் - குடியிருப்பு பகுதியில் தொலை தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத் கிராமம் வியாபாரிகள் தெருவில் பல நூறு குடியிருப்புகளும், கடைகளும் இருந்து வருகிறது. 

இங்கு பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி, முதியவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இடம் ரயில்வே நிலையத்தின் எதிர்ப்புறத்தில் அருகாமையில் உள்ள 66/1 பி என்ற சர்வே நம்பரில் உள்ள இடத்தில் அலைபேசிக்கான கோபுரம் அமைக்க வேலை நடைபெறுகிறது. 

இந்த பகுதியில் கர்ப்பிணி, பெண்கள், குழந்தைகள், முதியோர் பலர் கதிர்வீச்சு தாக்குதல் மற்றும் ஒலி மாசு நேரிடும் அதனால் புற்றுநோய், மூளையில் கட்டி, தலைவலி, மூளையில் புற்றுநோய், போன்ற பல நோய்கள் வர வாய்ப்புள்ளதால் இந்த அலைபேசி கோபுரத்தினை மேற்படி பகுதியில் அமைக்க கூடாது என பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அதையும் தாண்டி இதில் வேலை நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளதுனால் இதனை உடனே தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு வியாபாரிகள் தெரு, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad