தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் விஜயாபுரத்தில் நடைபெற உள்ளது. கொங்கு மண்டல மாநாடு தொடர்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அன்சாரி சிறப்புரையாற்றினார், மாவட்ட தலைவர் நூர்தின் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் யாசர் அராபத், துணை தலைவர் ஜாகீர், அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன் மற்றும் துணை செயலாளர்கள் ஷாஜகான், சேக் பரீத், அனிபா, காஜா பாய், ஜெய்லானி, மருத்துவர் அணி செயலாளர் நியாஸ், தொண்டர் அணி செயலாளர் சர்புதீன், வர்த்தக அணி செயலாளர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் தமிழகத்தில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5
இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவிதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக