சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஜேசிஐ காரைக்குடி கிங்ஸ் சார்பாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காரைக்குடியில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். இந்த ஆண்டு காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஜேசிஐ காரைக்குடி கிங்ஸ் சார்பாக உணவுப் பொருட்கள், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன. திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி செல்லும் சாலையில் ஜேசிஐ காரைக்குடி கிங்ஸ் தலைவர் ஜேசி மருதுபாண்டியன், திட்ட இயக்குநர் ஜேசி வினோத், பிஆர் மார்க்கெட்டிங் மண்டல இயக்குநர் ஜேசி இராமசந்திரன், பொருளாளர் ஜேசி ஜெயக்குமார் மற்றும் செயலாளர் ஜேசி ஹரிஹரன் மற்றும் உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக