ஆத்தூர் மெயின் பஜாரில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
ஆத்தூரில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் AK.கமால் தீன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். திமுக ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் AP. சதீஷ்குமார் மற்றும் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆத்தூர் தொடக்க வேளாண்மை சங்கத்தின் செயலாளர் பூபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் 75% அளவுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக