கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி வாலிபர் மாயம்
சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளனர். பின்னர் அவர்களில் சிலர் காந்தி மண்டபம் பின்புறம் தடைசெய்யப்பட்ட மரணபாறை என்ற பகுதிக்கு சென்று பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது கால் தவறி நெசவுத் தொழில் செய்யும் விஜய் (வயது 27) என்பவர் கடலில் விழுந்துள்ளார். இதனால் கடல் அலை அவரை அடித்துச் சென்றது. இதுகுறித்து அவருடன் சுற்றுலா வந்தவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கடலில் மாயமான இளைஞரை வள்ளங்களை வைத்து கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுப்பு-போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,T.தமிழன் ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக