மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு - ஆசிரியர் தலைமறைவு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு - ஆசிரியர் தலைமறைவு.

8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு - ஆசிரியர் தலைமறைவு.

நாலுமாவடி அருகேயுள்ள பணிக்க நாடார் குடியிருப்பு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராமன். 42 வயதான இவர் கடந்த 6 மாத காலமாக தான் இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராமன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவியின் தாயாருக்கு தெரிய வரவே மாணவியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அறிவியல் ஆசிரியர் ராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆசிரியர் ராமன் தலைமறைவானார். தலைமறைவான ராமனை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad