குடியாத்தம் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல்
கல்லூரி செஞ்சுருள் சங்கம் மற்றும்
போதைப் பொருள் தடுப்புச் சங்கம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெற்றது
தலைமையாசிரியர் ஆர்.விஜயகுமார் தலைமையேற்று உரையாற்றினார்.
செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்
பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி
வரவேற்புரையாற்றினார். பள்ளி தமிழாசிரியர் தமிழ்த்திருமால் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கேசவன்
ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜி ராவ் அவர்கள் கூல்
லிப்ஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் மாணவர் களின் மனநிலை பாதிப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி மாணவர் களிடையே உரையாற்றினார்
100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப் பொருள் தடுப்புச் சங்க உறுப்பினர்கள்
ஆகாஷ்,தரணி, அஜித்,தனுஷ் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் போதைப் பொருள் தடுப்புச் சங்க ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி
நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக