ரெப்கோ ஹோம் பைனான்ஸ் மூலம் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் கட்டியதில் முறைகேடு
நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில், 'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' மூலம் நடந்த அரசு பள்ளிகளில் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில், முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி கூடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இயக்க அமைப்பாளர் ராமேஸ்வரம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'கூடலுாரில் ரெப்கோ வங்கி வீட்டு கடன் வசதி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம், 12 அரசு பள்ளிகள், கழிப்பிடம் கட்டப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
பணிகள் துவங்கும் முன்பே, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீதும், அதற்கு காரணமான வங்கி பிரதிநிதிகள், உள்ளிட்டவர் மீது பதவி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் அமைப்பாளர் முருகன், நிர்வாகிகள் வேலுராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக