வேலூர் மாவட்டம் குடியாத்தம் 3231 ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் Rtn PDG JKN பழனி அவர்களின் தாயாரும் மறைந்த பெரியவர் JK நடேச முதலியார் அவர்களின் மனைவியுமான JKN. ஜெயலட்சுமி அம்மாள்(வயது 88) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் 24/01/25 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அம்மையாரின் மகன்கள் JKN மொகிலி, JKN பழனி, JKN ஜெகதீசன் ஆகியோர் ஒப்புதலுடன் அவரது கண்கள் வேலூர் டாக்டர் அகர்வால் கண்மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் மூலம் அம்மையாரின்ஆன்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கண்தான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் LIC கண்ணன், செயலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் சங்க கண் மற்றும் உடல்தானக்குழு தலைவர் எம்.ஆர்.மணி செய்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக