திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டு பெரியதோட்டம் பகுதியில் உள்ள
ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேல் சுவர் பெரும்பாலும் இடிந்து விழுகிறது . ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் மீது விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் ஆகவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியின் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திலும் வட்டவழங்கள் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்கள். பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால்..
ரேஷன் கடை கட்டிடங்களின் பொருப்பாளர்களான வளர்மதி அலுவலகத்திலும் நேரில் சென்று பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மனு கொடுத்தார்கள்.
ஆனாலும் மனு கொடுத்து பல மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையுமில்லாத நிலையில்.
பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள ரேஷன் கடையை சீரமைக்க வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியின் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைகவசம் அணிந்துகொண்டு ரேஷன் பொருட்கள் வாங்கும் நூதன போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்த நடைபெற்ற போராட்டத்தில் தெற்குதொகுதி து.தலைவர்
சேக் அலாவுதீன்,
தெற்குதொகுதி பொருளாளர் ஆரீஸ் பாபு,
பெரியதோட்டம் கிளைதலைவர் சதாம்,
கிளை பொருளாளர் அபுதல்ஹா,
கிளை துணை தலைவர்
சுலைமான் சேட் ,
மற்றும் கிளை செயல்வீரர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக