ஸ்ரீவைகுண்டம். ஜனவரி 25. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோயிலில் மூலவர் வைகுண்டபதி அவதார திரு நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.
காலை7 30 மணிக்கு விஸ்வரூபம் 9.30 மணிக்கு மூலவர் பால் திருமஞ்சனம் 10.30 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் தாயார்களுடன் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம். பின்னர் 12 மணிக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அத்யாபகர்கள் சீனிவாசன். சீனிவாசதாத்தம் பார்த்த சாரதி. கண்ணன். ஆகியோர் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவித்தனர்.
கோஷ்டியில் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. மூலவர் வைகுண்டபதிக்கு வருடத்திற்கு ஒருமுறை உற்சவரின் திரு ஆபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.6.30 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அர்ச்சகர்கள் ரமேஷ் . வாசு. அனந்த பத்மநாபன். சீனு. நாராயணன். ஆகியோர் அலங்காரம் செய்து 7.30 மணிக்கு காட்சி தந்தார்.
பின்னர் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன். தேவராஜன். வாசன். கண்ணன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் சண்முகசுந்தரம் மாரியம்மாள். முருகன்.முத்துகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் முருகன் உபயதார் வக்கீல் சந்திரசேகர். ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக