குடியாத்தம் ,ஜன 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது
காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் கோ பூஜை அலங் காரம் மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி முதல் காலை யாக பூஜைகள் அஷ்டபந்தனம் சாத்துதல் விசேஷ திரவிய பூர்ணாஹஹீதி நடந்தது
நேற்று விடியற்காலை மங்கல இசை இரண்டாம் கால யாக பூஜை மகா பூா்ணாஹீதி காலை 10 மணிக்கு ஆதி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது பின்னர் அன்னதானம் நடைபெற்றது
இரவு 7 மணிக்கு ஸ்ரீ அங்காளம்மன் வீதியுலா நடந்தது இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர்
எஸ் சௌந்தரராஜன்
கே எம் ஜி ராஜேந்திரன் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி மற்றும் சுமார் 1000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் ஆலய பரம்பரை தர்மகர்த்தா கோயில் நிர்வாகம்
தெய்வத்திரு ஜீவி துரைசாமி நாடார் & சன்ஸ் தெய்வத்திரு ஜீவி மாணிக்கம் நாட்டார் & சன்ஸ் தெய்வத்திரு ஜீவி கண்ணப்பன் நாட்டார் & சன்ஸ்
குடியாத்தம் நகர பருவதராஜ குல மரபினர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக