மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு

IMG_20250107_185611_004

 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு - ஒரு மணி நிலவரம் படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க  10 ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்.



மதுரை.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 14-ஆம் தேதிதை திருநாளில் நடைபெற உள்ளது.


ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம்,காளைகள் மருத்துவ பரிசோதனை மையம் , வாடிவாசல் அமையும் இடங்கள் போன்றவைகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.

பின்னர் அதிகாரிகளிடம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்


இதனைத் தொடர்ந்து தற்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நிலவரப்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 10,000 மேற்பட்ட காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் . மாலை 5 மணிக்குள் 15 ஆயிரத்தை தாண்டிவிடும் என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad