ஸ்ரீவைகுண்டம் ஜனவரி 17. ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் அத்யயன உற்சவம் இராப் பத்து 8 வது நாளான இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம்
8.30 மணிக்கு திருமஞ்சனம் 9.30 மணிக்கு திருவாராதனம். 10.30 மணிக்கு நித்யல் கோஷ்டி. மாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவேடுபறி நடந்தது. திருமங்கை ஆழ்வார் தன் படைவீரர்களுடன் பெருமாள் திருவாபரணங்களை களவாடி செல்ல சுவாமி கள்ளப்பிரான் குதிரை வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி பிடித்தார்.
அதன் பின்னர் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி திருமங்கை ஆழ்வார் படைவீரன் ஸ்ரீ பாதம் தாங்கி மணிகண்டன் எனபவரிடம் பெருமாள் சார்பாக திருவாபரணங்களின் பெயர்களைச் சொல்லி யாரிடம் கொடுத்துள்ளார். எனக் கேள்விகள் கேட்டல் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் திருமங்கை ஆழ்வார் பெருமாளிடம் வந்து திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்பின் அத்யாபகர்கள் சீனிவாசன். ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன். பார்த்த சாரதி சீனிவாசதாத்தம் ராமானுஜம். வைகுண்டன். வைகுண்ராமன் ஆகியோர் திருமங்கை ஆழ்வார் பாடிய வாடினேன் வாடி சேவித்தனர்.
பின்னர் இரவு வழக்கம் போல பரமபதம் மண்டபத்தில் திரவாராதனம் தீர்த்தம் கோஷ்டி நடந்தது. கடைசியாக கற்பூர சேவையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் தேவராஜன். வாசன். அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு நாராயணன்.
அனந்த பத்மநாபன் சீனு அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன். ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக