ஸ்ரீவைகுண்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம்,ஜன.24.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவரது வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்,
கிராம உதவியாளர்களை கிராம பணிகளை தவிர மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்பது உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் வட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சற்குணம், துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் விஜயமூர்த்தி, துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில், வட்ட பொருளாளர் தாமரைக்கனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக