திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் வயல்களில் மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஆய்வு . - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் வயல்களில் மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஆய்வு .

IMG_20250129_024215_699

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் வயல்களில் மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஆய்வு .


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சுற்றுவட்டாரத்தில் சம்பா பருவத்தில் 712 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி பயிர் செய்யப்பட்டு வருகின்றது. கள்ளிக்குடி பிருக்காவிலுள்ள கிராமங்களான வில்லூர், உவரி, தென்னமநல்லூர், சித்தூர், உள்ளிட்ட ஆகிய கிராமங்களில் சுமார் 217 ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது இதில் அக்ஷயா பொண்ணி, பிபிடி 5204, லிட்டர் நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனர் இதனை கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். இருப்பினும் பருவநிலை மாற்றம் எதுவும் இல்லாததால் நோய் தாக்கல் தீவிரம் அடைந்து கடந்த 25 .1. 2025 மதுரை வேளாண்மை கல்லூரி நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் யேசுராஜு அவர்கள் ஆய்வு செய்தார் இதில் பாக்டீரியா இலை கருகுதல் நோய், இலை அழுகுதல் போன்ற நோய்கள் தாக்கப்பட்டு இருந்தால் ஒரு ஹேக்டேருக்கு ஸ்டெரெப்ட்ரோமைசின், காப்பர் 200 கிராம் வீதத்தில் பூச்சி கொள்ளியினை கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் என்று கூறினார். இதனால் நோய் பராமல் தடுக்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad