மானாமதுரை அரசகுளம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைக்கு சீல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அரசகுளம் கிராம பகுதியில் உள்ள வாடி என்ற இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்ததையடுத்து, உடனடியாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்த இடத்திற்கு விரைந்த மானாமதுரை காவல்துறை கண்காணிப்பாளர் திரு நரேஷ், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும் சட்ட விரோதமாக பட்டாசு ஆலையை நடத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக