காட்பாடியில் கேஸ் சிலிண்டர் கசிவுவால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன்,மனைவி படுகாயம்!
வேலூர் ,ஜன 19 -
மனைவி உயிரிழப்பு கணவனுக்கு தீவிர சிகிச்சை காட்பாடி போலீசார் விசாரணை!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கீழ்வடுகன்குட்டையை சேர்ந்தவர் சேகர் (வயது 39) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார் இவரது மனைவி சங்கீதா (வயது 35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக சேகரின் மகன்கள் அவரது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தனர் நேற்று இரவு 7:00 மணியளவில் சங்கீதா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சமையலறை முழுவதும் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவி இருந்தது.அப்போது கியாஸ் கசிவு காரணமாக சங்கீதாவின் சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது.
சங்கீதா வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டபடி சமையலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதனைக் கண்ட அவரது கணவர் சேகர் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இவர்களின் அலர்கள் சத்தம் கேட்ட அக்கம்பக் கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சங்கீதாவுக்கு 100 சதவீத தீக்காயமும், அவரது கணவர் சேகருக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்று காலை 9:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக