முகவை முத்தமிழ் மன்றத்தில் விருது விழா!!
இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் முகவை முத்தமிழ் மன்றத்தில் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை முகவை முத்தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் பரக்கத் நிஷா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். முத்தமிழ் மன்றத்தின் தலைவர் மானுடப் பிரியன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து விழாவினை நடத்தினார். நிகழ்வின் முன்னதாக அனைவரையும் வளர்மதி இளஞ்செழியன் வரவேற்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கம்பன் கழகத்தின் நிறுவனர், தமிழ் செம்மல் சுந்தரராஜன் கலந்துகொண்டு, பத்தாண்டுகள் இலக்கியச் சேவையாற்றிய தமிழ் செம்மல் சுப்பையா அவர்களுக்கு முத்தமிழ் சேவை விருதையும், மருத்துவர் குலசேகரன் அவர்களுக்கு மருத்துவ மாமணி விருதையும், ஆசிரியர் அஜீஸ் அவர்களுக்கு சிறந்த கல்வியாளர் விருதுகளையும் வழங்கி உரையாற்றுகையில், அனைவரும் இலக்கியச் சேவை ஆற்றி, எங்கும் தமிழ் மொழி செழித்து வளர்வதற்கு பங்காற்றிட வேண்டுமென்றார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கவிதை அரங்கேற்றத்தில் புலவர் அப்துல் மாலிக்,கவிஞர் கு. ரா. ஆகியோர் கவிதை இயற்றினார்கள். நிகழ்வில் தமிழ் சங்கத்தின் பொருளாளர் மங்கள சுந்தரமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாளர்களுக்கான வாழ்த்துப் பாவினை கவிதாயினி கவிதா கதிரேசன், கொடிகை பாஸ்கரன் ஆகியோர் வாசித்தனர். நிகழ்வில் அனைவருக்கும் ஆயிஷா பர்வீன் நன்றியுரை நல்கினார். நிகழ்வுக்கான தொகுப்பினை ராஜ கலைஞன் விஜயராம் செய்திருந்தார். நிகழ்வின் ஒருங்கிணைப்பு பொருளாளர் தீபன் சக்கரவர்த்தி, பொதுச் செயலாளர் தேவி உலகராஜ், செயலாளர் தமிழரசி உதயகுமார் ஆகியோரால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக