குடும்ப கஷ்டங்களையும் காரியத்தடைகளையும் ஒரு தீபத்தில் நிவர்த்தி செய்து தரும் வீரஹனுமான் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

குடும்ப கஷ்டங்களையும் காரியத்தடைகளையும் ஒரு தீபத்தில் நிவர்த்தி செய்து தரும் வீரஹனுமான்

IMG_20250129_094643_760

குடும்ப கஷ்டங்களையும் காரியத்தடைகளையும் ஒரு தீபத்தில் நிவர்த்தி செய்து தரும் வீரஹனுமான்



ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை காசிபாளையம் ஸ்டெம் பார்க் பின்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது


இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்த கோடிகள் வருவது வழக்கம்


கோவிலானது இயற்கை வளம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதால் ஆலயத்தைச் சுற்றி நம் தேசிய பறவையான மயில்கள் வலம் வரும் இடமாகும்


இங்கு அமைந்துள்ள பரிவார தெய்வமாக கன்னிமார்கள், கருப்பண்ணன் சுவாமி, நரசிம்மர், வராகி, பிரித்திங்கா தேவி போன்ற தெய்வங்களுக்கு முக்கிய நாட்களில் யாகங்களானது சிறப்பாக நடைபெற்று வருகிறது


இதனால் இங்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பலரும் தியாகங்களுக்கு தேவைப்படக்கூடிய பொருட்களை வாங்கி தந்து யாகத்தில் கலந்துகொண்டு தங்களது பிரார்த்தனையை செய்து வருகின்றன


இந்நிலையில் இங்கு மேலும் அமைந்துள்ள பரிவார தெய்வமாக இருக்கக்கூடிய ஸ்ரீ வீரக அனுமான் எழுந்தருளி உள்ளார்


இவருக்கு வாரந்தோறும் வரும் சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை ஏலக்காய் மாலை கரும் திராட்சை மாலை இதனுடன் சிறிது வெண்ணை வைத்து 11 தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத்தடை நீங்க மற்றும் தொழில் வளர்ச்சி முன்னேற்றத்தை ஏற்படுத்த கூடும்


இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் வரும் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ வீர ஹனுமானுக்கு பாலபிஷேகம் சந்தன அபிஷேகம் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தால் நினைத்த காரியங்கள் வெற்றி ஆகும் என்பது ஐதீகமாக கூறப்பட்டு வருகிறது


மார்கழி மாதத்தில் வரக்கூடிய மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை திதி என்று ஆலயத்தின் சார்பாக ஸ்ரீ வீர அனுமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு
வடமாலை சாத்தியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது


இந்த கோவிலின் மேலும் ஒரு பிரசித்தி என்றால் அருள்வாக்கு சுவாமி உதைய அண்ணன் அவர்கள் முக்கிய நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூஜை செய்து வரக்கூடிய பக்தர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்திருக்கக்கூடிய காரியத்தை சரியாக கூறி அதற்கு தீர்வையும் கூறி அருள்வாக்கு சொல்லி வருகிறார்  இதனாலே கோவிலுக்கு வரக்கூடிய பக்தர் கோடிகளின் வரவேற்பானது அதிகரிக்கையை காணப்பட்டு வருகிறது


ஆகையால் இதுபோன்ற நாட்களில் உங்கள் வாழ்விலும் தீராத கஷ்டம்,காரியத்தடை, தொழில் வளர்ச்சி, வேண்டி இருப்பினும் ஈரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வந்து பரிவார தெய்வங்களையும், அங்காள பரமேஸ்வரி அம்மனையும் தரிசித்துச் சென்றாள் வாழ்வில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad