திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.ராஜேந்திரன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டாம் எனவும் ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கும் தொடர்பு எண் (1098,181) மற்றும் ஆபத்து நேரத்தில் காவல்துறையினரின் உதவியை பெற உதவும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக